தி இன்விசிபிள் மேன் விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது.
மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர்.
தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன்.
கண்ணுக்குத் தெரியாத ஒ...