Shadow

Tag: Vishal

ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால...
நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது....