Shadow

Tag: Y Not Studios

டெஸ்ட் | TEST review – NetFlix

டெஸ்ட் | TEST review – NetFlix

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா
விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், இறுக்கமான முகத்துடன் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரம் வாய்த்திருந்தும் அவர் சரியாக அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சின்ன கதாபாத்திரம் என்றாலும், காணாமல் போகும் தன் மகனுக்காக வெடிக்கும் பொழுது மீரா ஜாஸ்மின் தன் இருப்பினைப் பதிகிறார். எந்தப்...
TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும்

TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் 'டெஸ்ட்' திரைப்படத்தின் கதையாகும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான, அழுத்தமான கதைகளைத் தயாரித்த 'YNOT' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த், “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது 'டெஸ்ட்' படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தத் திரைப...
கேம் ஓவர் விமர்சனம்

கேம் ஓவர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே, விளையாட்டு முடிந்துவிடும். அதன் பின்னான வாழ்க்கை உயிரிருந்தும், இருளுக்குள் சிக்கிய நரகமாகவே இருக்கும். ஸ்வப்னாவின் வாழ்க்கை அத்தகைய இருளில் மூழ்கிவிடுகிறது. 2018 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் செல்லும் ஸ்வப்னா, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு தன் தைரியத்தை இழந்து தனக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். கேம் ஓவர் என்ற நிலையில் இருந்து, எப்படி அவள் மீண்டும் வாழ்க்கைக்குள் புகுகிறாள் என்பதுததான் படத்தின் கதை. நயன்தாரா நடித்த மாயா (2015) படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படம். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவான இறவாக்காலம் இன்னும் வெளியாகாதது துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். முதற்படத்தில், அவர் எப்படி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டாரோ, அதே போலவே, இப்படத்திலும் கட்டிப் போட்டுள்ளார். ‘ர...