இது தமிழ் ⚡ AMP

அழகு, பெண்மை, பாரம்பரியம்

By Dinesh R | Oct 30, 2015

அழகிய தமிழ் மகள் எனும் மகுடத்தை வெல்லப் போவது யார்?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அழகிய தமிழ் மகள் மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன.

‘வாவ் செலிப்ரேசன்’ எனும் இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் ‘டேக் கேர் இந்தியா’ எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது.

அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி.

இந்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ்ப் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம். மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில், போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன.

18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ்ப் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit எனும் வலைதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மறைந்த பத்மஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள்’ எனும் உலகத் தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகுப் போட்டியைத் துவக்கி வைத்தார். இந்தப் போட்டி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டுத் தளத்தில் இணைக்க முனைப்பாய்ச் செயல்படுகிறது. கருண் ராமன் (ஃபேஷன் வடிவமைப்பாளர்), நடிகை ஐஸ்வர்யா (‘காக்கா முட்டை’ பட நாயகி) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.