சுப்ரமணியபுரம் எனும் ஊரிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் மூடப்படுகிறது. அந்தக் கோயிலைத் திறக்க யார் முயற்சி செய்தாலும், அவர்கள் பாம்பால் தீண்டப்பட்டு இறக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
விளம்பரம்
தமிழில் கார்த்திகேயன் என்றும், தெலுங்கில் கார்த்திகேயா என்றும் எடுக்கப்படும் இப்படத்தில் நிகில் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். நாயகன் நிகிலுக்கு தமிழில் இது முதற்படம். சென்னை, பாண்டி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்லதொரு த்ரில்லர் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
‘கார்த்திகேயன் சாமி படமா, சமூகப் படமா?’ என்று கேட்டதற்கு, “இரண்டும் இணைந்ததுதான்” என்கிறார் படத்தின் இயக்குநர் சந்து.