இது தமிழ் ⚡ AMP

இனிது இனிது டைசன்

By Dinesh R | May 18, 2015

தெலுங்கு படமான ‘ஹேப்பி டேஸ்’ ரீமேக்கான ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமானவர் நாராயணன். அந்தப் படத்தின் இணை ஒளிப்பதிவாளர்தான் நிமேஷ் வர்ஷன் இயக்கும் ‘திறந்திடும் சீசே’ படத்துக்கு நாராயணனைப் பரிந்துரைத்துள்ளார். சி.எஸ்.கே. படத்தில் வில்லனாக நாராயணன் கலக்கியிருந்தது நினைவிருக்கலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“நிமேஷைப் பார்த்த போது, அவர் கதையை விவரித்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்ஷிகா, வீரவன் ஸ்டாலின் மற்றும் எனக்கு இடையில் நடக்கும் முக்கோண த்ரில்லர் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல் என்றார். அந்தக் கதாபாத்திரம், சீரியசாகவும் நகைச்சுவையாகவும் மாறும். அந்தச் சவாலான பாத்திரம் என் நடிப்புத் திறமையைக் காட்ட வாய்ப்பாக அமையும்னு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகரான எம்.ஜி.ஆர்., அலிபாபா படத்தில் சொல்லும் வசனம்தான் படத்தின் தலைப்பு. இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருங்கிய படம்” என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நாராயணன்.