இது தமிழ் ⚡ AMP

இன்னுமின்னும்

By Dinesh R | Nov 24, 2009

மீனவர்கள்
மீது
மீண்டும் தாக்குதல்

நாட்டின் எல்லையில்
நடந்த
துப்பாக்கிசூடு

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தலைநகரில்
குண்டு வைத்து
தகர்ப்பு

தற்கொலைப்படை
தலைவர்
தப்பியோட்டம்

தலைவரின்
தலைமகன்
நாளை வருகை

திருவல்லிகேணியில்
நேற்றிரவு
திருட்டு

வானூர்திநிலையத்தில்
பிடிபட்டனர்
போதைப்பொருள் கடத்தல்

கள்ளக்காதலனுடன்
கைது
கணவன் கொலைவழக்கில்

வன்கலவி சிறுமியிடம்
வாலிபர் கைது
விசாரணை நடந்துவருகிறது

கையூட்டு வாங்கிய
அரசு ஊழியர்
கையும் களவுமாக
பிடிபட்டார்

இருவேறு
சாலை விபத்தில்
இரண்டுபேர் உயிரிழந்தனர்
கவலைக்கிடமாக
ஏழுபேர் மருத்துவமனையில்

பிரபல அரசியல்வாதி
கொலைவழக்கில்
இன்று பிணையம்
பெற்றார்

வரி ஏய்ப்பு
லட்சகணக்கில்
தொழிலதிபர் செய்த
மோசடி அம்பலம்

நடிகையின்
விவாகரத்து வழக்கு
புது நாயகனுடன்
இன்று நேரில் வந்தார்

நாடாளுமன்றத்தில் அவை
ஒத்திவைப்பு உறுப்பினர்களின்
அமளியால்

தங்கம் விலை
உயர்வு
சவரனுக்கு இரநூற்றிஐம்பது ரூபாய்

அத்திவசிய பொருள்
விலையேற்றம்
நேற்று தாக்கல் செய்த
வரவு-செலவு அறிக்கையில்

ஊதிய உயர்வு கோரி
அரசு ஊழியர்கள்
நாளை போராட்டம்

பணிநிரந்தரம் கேட்டு
உண்ணாநிலை
ஒருநாள் முழுதும்

– சே.ராஜப்ரியன்