கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, வயதைக் குறைத்து புது பொலிவுடன் 007 பாத்திரத்தைக் களமிறக்க உள்ளனர். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஸ்கைஃபால் , ஸ்பெக்டர் ஆகிய படங்களிலேயே அவதானித்து இருக்கலாம்.
விளம்பரம்
மிக இளமையான ஜேம்ஸ் பாண்ட்டாக “தியோ ஜேம்ஸ்” நடிக்கவுள்ளார். 31 வயதாகும் இவர், “என் சிறு வயது கனவிது. விஷயத்தைக் கேள்விபட்டவுடன் நாற்காலியில் இருந்து நழுவி விழப் போனேன். கனவு காண்பது போலுள்ளது” எனத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
ஆகஸ்ட்டில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஃபிப்ரவரியில் வெளிவரவுள்ளது. அது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.