இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி‘ திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த இளம் இயக்குநர் அவர் மீது உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி.
விளம்பரம்
‘ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெற வேண்டும் , அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய உழைப்பு அதன் பிரதிபலனாகக் கிடைத்த வெற்றி ஆகியவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிந்தவர் , படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த பொது அந்த மனிதரின் திரையுலக ஞானம் எவ்வளவு பெரியது எனப் புரிந்தது. இந்த உன்னதமான உற்சாகமான நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர்.முருகதாசின் A.R.M . PRODUCTONS மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலம்ஸ் ஃப்லிமஸ் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னுடைய படத்தில் பணியாற்றிய நடிக நடிகையர் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி ‘ எனக் கூறினார் அட்லி.