‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால்.
“எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் கோமாவில் இருந்தான்” என்றார் இயக்குநர் விஜய்.
“இந்தப் படத்தில் வொர்க் பண்ற எடிட்டர் ரூபனும், ஜீ.வி.பிரகாஷூம் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமா படத்தோட கதையைக் கேள்விப்பட்டேன். வழக்கமா புதுசா ஒரு கதைன்னு சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே இயக்குநர் திரு புதுசா ஒரு கதை பிடிச்சிருக்கார். ஹீரோ எக்ஸைட் ஆனா தூங்கிடுவாரு. நான் ட்ரைலர் பார்த்ததிலிருந்து, படம் எப்ப வரும்னு தூங்காம வெயிட் பண்ணிட்டிருப்பேன்” என்றார் இயக்குநர் அட்லி.
“சில கதையெல்லாம் கேட்டா தூக்கமே வராது. ஆனா இதில் நிறைய தூக்கம் வருது.. ஹீரோவுக்கு. கஜினி மாதிரியான ஒரு மிகப் பெரிய ஹிட்டாக இந்தப் படம் இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோக்கு, வில்லன் அடிக்க வரும்பொழுது தூக்கம் வருவது என்பது அமேசிங்கான தாட்” என்றார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.
“ஏதாவது டிஃபரன்ட்டாகப் பண்ணணும்னு நினைச்சுப் பண்ற விஷயத்தை விட, சர்ப்ரைஸாக நம்மள தேடி ஒரு விஷயம் வரும்பொழுது, அது ரொம்ப சிறப்பாக இருக்கும். இது எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. இயக்குநர் திரு என்னிடம் கதை சொல்லும் பொழுது, முதலில் நார்கோலெப்ஸி பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன். யூ-ட்யூப்பில் காட்டினார். சென்னையிலேயே நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கான்னு தெரிஞ்சது” என்றார் விஷால்.