இது தமிழ் ⚡ AMP

ஐ ஆம் ஜிகினா.!

By Dinesh R | Aug 19, 2015

கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். இதைக் குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரைக் கவர நினைக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றியக் கதை தான் ஜிகினா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘ஜிகினா’ திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதே எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்கு சாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல. என்னுடையக் கதா பாத்திரத்தை இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்துள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்களிடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கையோடு இருக்கிறேன்.

வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதாப்பாத்திரம் மிகப் பெரிய வரமாகும். நமது வாழ்வில் இன்றி அமையாத அங்கமாகி விட்ட ஃபேஸ்புக் தான் ‘ஜிகினா’ வின் முக்கிய கதாப்பாத்திரம்.

‘ஜிகினா’ இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும். இதுவே வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை ‘ என்று நம்புகிறார் விஜய் வசந்த்.