குறிப்பிட்ட அளவு திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும் சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.
சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில் வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான்.
1939இல் ஜேம்ஸ் தர்பரின் கதையை, 1947இல் படமாக உருவாக்கினார்கள். மீண்டும் இப்போது ‘த சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டெர் மிட்டி (The secret life of Walter Mitty)’ என மீண்டும் படமாக எடுத்துள்ளனர். பிரபல நடிகர் பென் ஸ்டில்லர் (மிட்நைட் அட் த மியூசியம் – பாகம் 1 அன்ட் 2 ஆகிய படங்களில் நடித்தவர் ) தான் இதில் கதையின் நாயகனாக நடித்துப் படத்தை திறம்பட இயக்கியுமுள்ளார். ஷிர்லி மெக்லேன், நாயகனின் தாயாக நடித்துள்ளார். நாயகன் பென் ஸ்டில்லர்ரின் காதல் நாயகியாக கிறிஸ்டின் விக் வருகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று சீன் பென் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் க்றிஸ்துமசுக்கும், இங்கிலாந்தில் அதற்கடுத்த நாளும் வெளியான இப்படம், இந்தியாவில் ஜனவரி 3, 2014 அன்று வெளியாகவுள்ளது.
– கோலிவுட் பாலா
விளம்பரம்