நட்பைப் பற்றிய கதைக்கு தமிழ்த் திரையுலகில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. தாய்ப்பாசம், காதலைத் தொடர்ந்து அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கதை நட்புதான். ‘கப்பல்’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தின் மைய அம்சம் ‘நட்பு’. ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி கிருஷ். இவர் இயக்குநர் சங்கரிடம் இயக்கம் பயின்றவர் .
‘கப்பல்’ சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் படமாகும். VTV கணேஷ், கருணாகாரன், அர்ஜுன் நந்தகுமார், மற்றும் ரோபோ ஷங்கர் இந்த நகைச்சுவைப் பயணத்துக்குப் பெரிதும் உதவுவர். சூது கவ்வும், தெகிடி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தினேஷ் கிருஷ்ணன், ‘மூடர் கூடம்’ படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றிய நடராசன் ஷங்கர், ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய ஆறுசாமி, பல்வேறு வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளர் ஆண்டணி, பாடலாசிரியர்களாக கார்க்கி, கபிலன் நடன இயக்குநராக தினேஷ் என்று திறமைகளின் சங்கமமாக இருக்கும் இந்தப் படத்தில் இயக்குநராக என்னுடைய பங்கு மிக முக்கியம் என்பதை நான் அறிவேன். என் மேல் நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் செந்தில், அருள் ராஜ், மற்றும் சுதன் ஆகியோரின் சினிமா பற்றிய நுண்ணறிவும் ஆர்வமும் என் பொறுப்பை பன்மடங்கு ஆக்குகிறது. திரைக்கதை எங்கும் தென்படும் நட்பு, படப்பிடிப்பிலும் எதிரொலித்தது. நட்பு என்ற வார்த்தையில் இருக்கும் பலம், வெற்றிப்பயணத்துக்கு உரம் சேர்க்கும்.