இது தமிழ் ⚡ AMP

“கள்ளப்படம்” தொடங்கியது

By admin | Dec 02, 2013

இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகி வருகிறது “கள்ளப்படம்”. பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெ.வடிவேல் இப்படத்தின் இயக்குநராய் களம் இறங்குகிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய் இருந்த ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, காகின் படத்தொகுப்பில், கே இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த 21 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிப்வாளர் பி.சி.ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தனர். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தன்னுடைய இணை இயக்குநரை ஆசிர்வதிக்கும் விதமாக இயயக்குநர் மிஷ்கின் படத்தின் மூன்று காட்சிகளை இயக்கினார்.