இது தமிழ் ⚡ AMP

குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன்

By Dinesh R | Dec 10, 2014

இதுவரை 15 தமிழ்ப்படங்களில் நடித்துள்ள சுசித்ரா சிவராமன், குறிப்பிடும்படியான குழந்தை நட்சத்திரமாக இருந்து தனக்கென தனித்த அடையாளங்களுடன் வளர்ந்து வருகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இளைய தளபதி விஜய்யின் “ஆதி” படத்தில் சிறு வயது த்ரிஷா பாத்திரத்தில் அறிமுகமாகி.. அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்திலும், சிவ கார்த்திகேயன் தங்கையாக ‘காக்கி சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், 2005 முதல் இதுநாள் வரை சன் டி.வி.யில் குழந்தைகளுக்கான ‘குட்டீஸ் சாய்ஸ்’ நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சுட்டி டி.வி.யில் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். விஜய் டி.வி.யின் பிரபல சீரியல்களான சரவணன் மீனாக்ஷி, தாயுமானவன் முதலியவற்றிலும் நடித்துள்ளார். எட்டு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வரும் அவர்.. நாகர்கோயில், மெட்ராஸ் மியூசிக் காலேஜ் போன்ற பல ஊர்களில் அரங்கேற்றமும் செய்துள்ளார்.

எத்தியராஜ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படிக்கும் சுசித்ராவுக்கு, ரியாலிட்டி டி.வி. ஷோக்களில் காம்பியரராக வேண்டுமென்பதே ஆசை. படைப்புத் திறனை வெளிக்காட்டக் கூடிய சூழலில், தன் திறமைகளை சரியான உபயோகித்து சினிமாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனச் சொல்கிறார்.

சமீபத்தில், தனது பிறந்தநாளை ரஜினிகாந்த, சோனாக்ஷி சின்ஹா, K.S.ரவிக்குமார், விஜயகுமார் முதலிய லிங்கா படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.