இது தமிழ் ⚡ AMP

சகோதரர்களின் ஜெயம்

By Dinesh R | Sep 06, 2015

தனி ஒருவன் ஈட்டிய வெற்றியில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் ஜெயம் சகோதரர்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தனி ஒருவனின் வெற்றிக்கு முன்பே, ஜெயம் ராஜா தன் பெயரை மோகன் ராஜா என மாற்றிக் கொண்டார். இப்போது, தனி ஒருவனின் வெற்றிக்குப் பின்பு, ஜெயம் ரவியும் தன் பெயரை ‘தனி ஒருவன் ரவி’ என மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விக்கு, “ஜெயம் என்பது என் விசிட்டிங் கார்ட். எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கடைசி வரை நான் ஜெயம் ரவிதான். ஆனால் தனி ஒருவனுக்கு என் நெஞ்சில் இடம் கொடுத்துள்ளேன். தனி ஒருவன் – என் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட முத்திரை போன்றது” என்றார் ஜெயம் ரவி.

“மோகன் ராஜா என நான் பெயர் மாத்தியதற்கு நிறைய பேர் திட்டினாங்க. ஜெயம் ராஜா என்ற ப்ராண்ட் நேமை எப்படி நீங்க மாத்தலாம்னு கேட்டாங்க. எனக்குள்ள சினிமாவைத் திணிச்சது என் அப்பா. அவருக்கான ட்ரிப்யூட்தான் இந்தப் படம். இந்தப் படத்தில் அவர் பெயர் வ்ர்ணும்னு நினைச்சேன். போட்டேன். அவ்ளோதான்” என்றார் மோகன் ராஜாவாக பெயரை மாற்றிக் கொண்ட ஜெயம் ராஜா.