இது தமிழ் ⚡ AMP

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

By Dinesh R | Aug 03, 2013

“நீதிக்கு தண்டனை” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அதிரடியாய் நுழைந்தவர் சரண்ராஜ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், அடுத்து தனது மகன் தேஜ்ராஜ் என்பவரை நடிகராக களம் இறக்குகிறார் .

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான்    நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.

பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தி இருக்கிறார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்” என்றார் சரண்ராஜ். 

“பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட், ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாலு மகேந்திராவின்  பயிற்சி பட்டறையில் நடிப்பு எனப் பயிற்சியுடன் களம் இறங்குகிறேன். உங்கள் ஆதரவும், அன்பும் இருந்தால் நிச்சயம் நான் கலையுலகில் வலம் வருவேன்” என்றார் தேஜ்ராஜ்.