இது தமிழ் ⚡ AMP

சவரகத்தியின் இடையில்

By Dinesh R | Sep 21, 2015

இயக்குநர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, ‘சவரகத்தி’ எனும் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தைப் பற்றி அறிவித்துள்ளார். ‘ட்ரான்ஸ் வேர்ல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் (Trans World Telecommunications)’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ‘சவரகத்தி’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.