இது தமிழ் ⚡ AMP

நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

By Dinesh R | Feb 21, 2014

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன்‘ என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது .

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது, அவரைக் காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோவுடனும் பால்கனுடன் இணைந்து போராடும் போது தான் தான் ஒன்றை அறிகிறார். அவர் இப்போது போராட போவது, “தி வின்ட்டர் சோல்டர்” என்ற மாபெரும் அழிவு சக்தியுடைய எதிரி என்பதை.

உலக பிரசித்திப் பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான கேப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941 ஆம் வெளியிடப்பட்டது. அந்தத் தொடரின் பிரதிபலிப்பாக உலகமெங்கும் தற்போது திரை வடிவத்தில் வர இருக்கும் இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.