இது தமிழ் ⚡ AMP

நனவான மாபெரும் கனவு

By Dinesh R | Mar 16, 2015

“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைப்படும் போதும் எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையைத் தேர்ந்தெடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி, இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுக இயக்குனர் ஆதிக், “என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார். தேவைப்பட்டால் நான் அவருக்கு உதவவும் செய்வேன்” என்று நெகிழ்ச்சியாக முடித்தார்.

“ஆதிக் வளரும்போதே, நான் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கற்றுத் தந்ததோடு கூட அதே அளவுக்கு சினிமா ஆர்வத்தையும் கற்றுக் கொடுத்தேன். அப்பனுக்கு பாடம் தந்த சுப்பனைப் போல் என் மகனை நான் பாவிக்கேறேன்.

நான் ஜெயிக்க வேண்டும் என்பது கனவு; என் மகன் ஜெயிக்க வேண்டும் என்பது மாபெரும் கனவு” என்று பெருமிதத்தோடு கூறினார் ரவி கந்தசாமி.