இது தமிழ் ⚡ AMP

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

By Dinesh R | Jan 31, 2014

புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் “டேப்”டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.

“என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures தயாரிப்பில் நடிப்பதும் மிகவும் பெருமையான ஒன்று” எனக் கூறினார் .