இது தமிழ் ⚡ AMP

நுரை பீர்க்கன் குழம்பு

By admin | Nov 23, 2018

வணக்கம்,

  

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அட எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குங்களா:-)… தோட்டத்தில் வேலி ஓரத்தில் படந்திருக்கும்… நல்லா பிஞ்சு காயை கொண்டுவந்து நல்லா காரசாரமா குழம்பு வச்சு சாப்பிட்டா…  அருமையா இருக்கும்….

தேவையான பொருட்கள்:

நுரை பீர்க்கன் காய் -2

தக்காளி- 1

சீரகம் – 1 ஸ்பூன்

கொத்துமல்லி – 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 கப்

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

மிளகாய் – 2

கறிவேப்பிலை – கைப்பிடி

 

செய்முறை:

Step 1:

 

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

Step 2:

நறுக்கிய பீர்க்கன்காயை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

 

தேவையான அளவு நீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும், மத்தால் கடைந்து, எடுத்து பறிமாறவும்.

 

சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை இவை எல்லார்த்துக்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.