இது தமிழ் ⚡ AMP

நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

By admin | Dec 01, 2013

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்த மகிழ்ச்சியும், முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது. 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும், அவரது தொழில்நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள். “அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம்” என்று கூறி பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என பெருமையுடன் கூறினர் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி ஆகியோர். 

நடிகர்கள்:

>> அஜீத்
>> தமன்னா
>> சந்தானம்
>> பாலா
>> விதார்த்
>> முனிஷ்
>> ரமேஷ் கண்ணா
>> அப்புகுட்டி
>> ‘நாடோடிகள்’ அபிநயா
>> மனோசித்ரா
>> ‘எதிர்நீச்சல்’ சூசகுமார் 
>> இளவரசு
>> மயில்சாமி
>> பெரியார்தாசன்
>> தேவதர்ஷினி
>> வித்யுலேகா ராமன்
>> க்ரேன் மனோகர்
>> ப்ரதீப் ரவாத்

பணிக்குழு:

>> ஒளிப்பதிவு – வெற்றி
>> கலை – மிலன்
>> படத்தொகுப்பு – காசி விஸ்வநாதன்
>> சண்டை – செல்வா
>> நடனம் – தினேஷ்.