இது தமிழ் ⚡ AMP

புதிய பொலிவில் “இது தமிழ்”

By admin | Jan 16, 2014

இயன்றவரை இனிய தமிழில் என்பதைத் தன் ஆதார நோக்கமாய்க் கொண்டு இயங்கி வரும் “இது தமிழ்” இணைய தளம், இன்று முதல் புதிய பொலிவுடன் தனது இரண்டாவது அத்தியாயத்தை துவக்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

புதிய நிர்வாகம், புதிய ஆசிரியர் குழு, புதிய தள வடிவமைப்பு, புதிய செயல்திட்டங்கள் இவற்றோடு எங்களின் ஆதார நோக்கமும் சேர்ந்திணைய, இத் தமிழர் திருநாளில் புதிய மேம்படுத்தப்பட்ட “இது தமிழ்” தளத்தினை உங்கள் பார்வைக்கும் பயனுக்கும் படைக்கிறோம். இந்தத் தளத்தின் வளர்ச்சியில் எங்களுக்கு இணையான பங்களிப்பு இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும் இருப்பதாகத் தீவிரமாய் நம்புகிறோம். எனவே எங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் உங்களின் மேலான பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

உங்களின் பேராதரவையும் பெருங் கவனத்தையும் வேண்டி நிற்கும்..

ஆசிரியர் குழு.


கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பிட..

ithuTamil@gmail.com

புதிய ஆக்கங்களை அனுப்பிட..

kuzhumam@ithuTamil.com