இது தமிழ் ⚡ AMP

புறம்போக்கு விஜய் சேதுபதி

By Dinesh R | May 05, 2015

படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப்  பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது, “இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இக்கதாப்பாத்திரம் நிலைத்து நிற்கும். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்றும் ஏதும் எடுக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்ந்தால் போதுமானது. எமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையைக் கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் நன்கு விளக்கினார்.

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தூன்றிய கதையம்சம் கொண்டது. நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என படப்பிடிப்பு நாட்கள் முழுதும் இனிமையாக கழிந்தது. படத்தில் யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஏன்னா, ஜனநாதன் சாரின் கதையில் எங்களுக்கு என்றொரு இடமிருக்கு. அதில் நன்றாக நடிக்கவும் வாய்ப்பிருந்தது” எனக் கூறினார் நடிகர் விஜய் சேதுபதி.

மே 15ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளது.