இது தமிழ் ⚡ AMP

மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

By Dinesh R | Jan 22, 2015

சிம்புவின் படம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆனாலும் அவருடைய படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இது சிம்புவால் மட்டுமே இயலும். இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பைத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் எஸ் டி ஆரின் மூன்று படங்கள் வெளிவர உள்ளது. 2015, எஸ் டி ஆருக்கு அதிர்ஷ்டமான வருடமான அமையவுள்ளது.

‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று இருக்கிறது. தன் மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ் டி ஆருக்கு அந்தக் குணத்துக்காகவே கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம். அந்த வகையில் ‘இது நம்ம ஆளு’ டீசரில் வரும் எஸ் டி ஆரின் வசனங்களுக்கும், அவரைக் குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்ப்பு கிட்டியது.

‘என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி. இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தைப் பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிரக் கூறினார் எஸ் டி ஆர்.