இது தமிழ் ⚡ AMP

முதல் இந்திய நடிகர்

By Dinesh R | Aug 15, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலராலும் நடிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்