இது தமிழ் ⚡ AMP

மொழியும் பழியும்

By Dinesh R | Aug 26, 2010
மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது.

அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. 

உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,“சொல்லு டா” என்றேன்.

“டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ சரியா??”   

“ஹ்ம்ம் சரி பேசுறேன்”.

அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.

மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.

தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கிலத்திலேயே பேச தொடங்கினான்.

அவன் பேசிய ஆங்கிலம் என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. சங்கடத்திற்குகாரணம் அவன் ஆங்கிலம் பேசிய விதம்.ஒரு வழியாக பல தவறுகளுக்கு மத்தியில்அவன் என்னிடம் கேட்க வந்த கேள்வியை புரிந்துகொண்டேன்.

அவனுக்கு நான் தமிழிலேயே பதிலை தந்தேன்.15 நிமிடங்கள் வரை சென்ற எங்கள் உரையாடல் அவன் புரிதலுக்கு பின்பு ஒரு முடிவுக்கு வந்தது.

ரத்து செய்த பயணத்தை துவக்கும் எண்ணம் மட்டுமே உண்டாக, மீண்டும் அதே அதிர்வு.

“இப்போ தான்டா அவனுக்கு பேசி புரியவச்சி டவுட்ட கிளியர் பண்ணேன்.”

“ஹ்ம்ம் சொன்னான், ஆனா டவுட் கிளியர் ஆனதை இல்ல,நீ ஆங்கிலம் பேச தெரியாம தமிழ்ல பேசியதை சொன்னான்“.
 
(போனா போகுது,அவனுக்கு புரியட்டுமேன்னு தமிழ்ல சொன்னா,பயபுள்ள என்ன சொல்லியிருக்கு பாரு ??)