இது தமிழ் ⚡ AMP

யாமிருக்க பயமே!

By Dinesh R | Jan 23, 2014

 

‘பயம்’ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் ‘யாமிருக்க பயமே’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் ‘யான்’ படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் ‘யாமிருக்க பயமே’.

இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் ‘யாம் இருக்க பயமே’ இந்த வருடம் வெளி வர இருக்கும் படங்களில் மிக முக்கியப் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்தார்.