வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?
விளம்பரம்
எத்தனை ‘நல்ல’ கல்யாணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க? விவாகரத்தாகி, கொடுமைகளுக்கு ஆளாகி? அவர்களை சமூக ரீதியாக நல்லபடியாக வாழ ஏதாவது செய்தார்களா? அதெல்லாம் அவங்க சொந்த பிரச்சினை. வரதட்சினை வாங்குறது கலாச்சாரம். அதை சட்டரீதியாக எதிர்க்கிறது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். என்ன ஒரு ஜனநாயக ரீதியான சமத்துவமான முடிவு!! நாடக கல்யாணம் பண்ணி ‘அகப்படும்’ பொண்ணுகளை காப்பாத்த சங்கம் போட்ட ‘ஆம்பிளைகள்’ தன் சாதியிலேயே கல்யாணம் பண்ணி வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட, விவாகரத்து பெற்ற, பிரிந்து வாழும் பெண்களுக்கு என்ன செய்தார்கள்?
இங்கே உற்று நோக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ‘நாடக கல்யாணத்தால் ஏமாறும்’ பெண்கள் குலத்தை காக்க புறப்பட்டிருக்கும் நாயகர்கள், தலித் பெண்களை ஈவ்டீசிங் எனப்படும் பாலியல் தொல்லை முதல், வலிந்து வன்புணர்வு வரை செய்யும் தம் சாதி ஆண்களை சட்டரீதியாக தண்டிக்க கூட வேண்டாம், ஏன் என்று ஒரு சுட்டு விரலாவது கண்டனமாக நீண்டிருக்குமா என்றால், அது தான் இல்லை. அது அவர்களின் தார்மீக உரிமை அல்லவா?
அது ஏன் இந்த கூட்டம் ‘ஏமாறும் பெண்களை’ மட்டுமே காப்பாற்ற புறப்பட்டிருக்கிறது? ஆண்கள் யாரும் ஏமாறுவதே இல்லையா? பார்க்கப்போனால் காதல் தோல்வி என ‘பெண்களை நம்பாதே’ வகை புலம்பல்கள் ஆண்களிடம் இருந்தே அதிகம் வருகின்றன. பிறகு ஏன் பெண்கள் மேல் மட்டும் அக்கறை? சாதியமைப்பின் ஆணிவேர் பெண்ணடிமைத்தனம். ஒரு சதியில் இருப்பவன் தனக்கு கீழாக கருதப்படும் சாதியில் இருந்து ஆண் மூலமாக கலப்பு ஏற்படுவதை பெரிது படுத்துவதில்லை. ஆனால் பெண் மூலமாக ஏற்பட்டதோ, அவ்வளவு தான். தன சாதி மானம் பீரிட்டு கிளம்புகிறது. ஏன்? பெண் என்பவள் அடிமையாக இருக்க வேண்டியவள். தனக்கு கீழாக கருதப்படும் சாதி ஏற்கனவே அடிமையாக இருப்பது. தன் அடிமை தன் இன்னொரு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியுமா? முதலாளிக்கு அல்லாவா அடிமையாக இருக்க முடியும்? மேலும் பெண் சுதந்திரமாக முடிவெடுக்க ஆரம்பித்து விட்டால் ஒரே தலைமுறையில் சாதி அமைப்பு வேர் அழுக ஆரம்பித்து விடும் அல்லவா? அம்பேத்கர் இருந்தாரோ தப்பித்தோமோ.. இல்லையென்றால் ஓட்டுரிமை பறிப்பு முதல் தேவதாசி/சதி வரை எல்லாமே இன்னும் இருந்திருக்கும். அதனால் தான் பார்ப்பன தலைமை மட்டுமே இருக்கும் நம் அரசியல் ஊடகமான பள்ளி பாட புத்தகங்களில் தொடர்ந்து அம்பேத்கர் அவமானப்படுத்தபடுவதும் அம்பேத்கரும் பெரியாரும் இருட்டடிப்பு செய்யப்படுவதும் இன்றும் நடைபெறுகிறது.
இந்த சாதி ஆதரவு களவாணிப் பயல்கள் தீர்மானங்களை பார்த்தோமானால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க முடியும். இவர்களனைவரும் பெண்கள் சொத்துரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட்டிருப்பவர்கள். ‘நிலவுடைமை’ பாதிக்கப்படுகிறதாம். சொத்துரிமை சட்டம் பரம்பரை சொத்துக்கு மட்டுமே செல்லும். சுயமாக சம்பாதித்த சொத்துக்கு செல்லாது. தான் உழைத்து சம்பாதிக்காத பாட்டன் சொத்து தனக்கு மட்டுமே வேண்டும், உடன் பிறந்தவளுக்கு தர மாட்டேன். என்ன ஒரு தன்மானம்? என்ன ஒரு ஆண்மை? சங்கம் வைத்து தனக்கு குறைந்த பட்சம் இவ்வளவு ரூபாயாவது பிச்சை போட வேண்டும் என்று தீர்மானம் போடும் பிச்சைக்காரர்கள் தேவலாம்.
இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமல்ல, எல்லா சட்டங்களுமே தவறாக பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?
இதெல்லாம் இதுநாள் வரை சொன்னதை கேட்ட அடிமைக்கூட்டம் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து சொந்த காலிலே சுயமரியாதையுடன் பிழைக்கிறார்களே என்ற வயித்தெரிச்சல். இது தலித்துகளுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும். கார்ப்பரேட் வந்து பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்ற பின்னர் விவாக ரத்து அதிகமாகி விட்டதாம். குடும்ப அமைப்பு சிதைகிறதாம். ஒரு படிச்ச பரதேசி சொல்லுது. உண்மை தான். ஒருத்தரை பொருளாதார ரீதியாக அடிமை படுத்தினால் தான் குடும்பம் மற்றும் சாதி என்கிற அரசியல் கட்டமைப்புகள் இருக்க முடியும்.
அப்படி ஒருத்தர் அடிமையாக இருந்து அந்த கட்டமைப்பை காக்க வேண்டிய அவசியம் என்ன? இக்கட்டமைப்புகள் மனிதனுக்காகவா, இல்லை மனிதன் இக்கட்டமைப்புகளுக்காகவா? இது எல்லா மனித பிறவிகளுக்காகவும் அமைக்கப்பட்டதா, அல்லது ஒருவரின் உழைப்பை உறிஞ்சி இன்னொருவர் சுகமாக இருக்க அமைக்கப்பட்டதா? அப்படி தான் இருக்கும் என்றால் தலித்துகளும் பெண்களும் அக்கட்டமைப்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வலி, தன்மானம், சுதந்திரம் போன்றவை அனைவருக்குமானது இல்லையா?
– பாரதி