| |
| விசாம் அகமது காஷ்மீரி |
|
| விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!! |
|
|
|
| க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்? |
|
|
|
|
ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?//
யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said? |
|
|
|
|
| ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது… இது ராகவன்’ஸ் இன்ஸ்டின்க்ட் |
|
|
|
|
| பல்ராம் நாயுடு இந்தப் படத்திலு வில்லன் எந்த க்ரூப்பூ? அல்கொய்தாவா? லஷ்கிரி தைபவா? இல்ல அல் உம்மாவா? |
|
|
|
|
| தெனாலி எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் எண்டாலும் பயம்.. வசூல் எண்டாலும் பயம். |
|
|
|
|
| விஞ்ஞானி கோவிந்த் ராகவன் DCP இந்தப் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்காதுன்னு சொல்லலை, கிடைச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன். |
|
|
|
|
வசுலீஸ்ட் ராஜாராமன் //வசூல் எண்டாலும் பயம்//
யோவ்.. பாஞ்சாலி. அடிச்சு மூஞ்சு கீய்ஞ்சீலாம் பேத்துருவேன். உன்ன நான் என்னாய்யா பண்ணேன்? |
|
|
|
|
| விஸ்வ நாதன் பல்ராம் நாயுடு நானே ஹீரோ.. நானே வில்லன். |
|
|
|
|
| வின்சென்ட் பூவராகவன் என்னன மக்கா? ரெட்டை வேஷமா!? ;)))) |
|
|
|
|
| விஸ்வ நாதன் அய்யய்யோ.. ஏன் இந்த அய்யம்பேட்டை வேலை!? |
|
|
|
|
சாக்கேத் ராம் //ரெட்டை வேஷமா!?//
‘அதை சிறப்பாக பண்ண.. there is a only man my friend. பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என என் நண்பர் அபயங்கர் சொல்லிண்டிருப்பார் |
|
|
|
|
| தெ னாலி எனக்கு ஃபேஸ்புக்னாலும் பயம்.. லைக்னாலும் பயம்.. கமென்ட்னாலும் பயம். |
|
|
|
|
வேலு நாயக்கர் //இந்தப் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்காதுன்னு சொல்லலை, கிடைச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்.//
கோவிந்த் நீங்க நல்லவரா கெட்டவரா? |
|
|
|
|
| குணா இந்த மனுஷப் பயங்க எல்லாம் கெட்டவங்க. ஒருத்தன் ஒருத்தன சுட்டுக்கிட்டு சாகுற மாதிரியே படம் எடுக்குறாங்க.. அபிராமி.. அபிராமி. |
|
|
|
|
| கிருஷ்ண வேனி ஆஸ்காரா!? அதென்ன புது மாதிரி காரா? பெட்ரோலா டீசலா? ஆராவமுதனுக்கு ஒன்னு வாங்கிக் கொடுத்தா ஆஃபீஸ் போயிட்டு வர வசதியா இருக்கும். பாவம் கொழுந்தே வெயிலுல கறுத்துட்டான். |
|
|
|
|
| வசுலீஸ்ட் ராஜாராமன் டேய் குணா.. அழாத. எங்கம்மா கட்டுப்பிடி வைத்தியம்னு ஒன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. |
|
|
|
|
| நல்லசிவம் அன்பேசிவம் வசூல் சார்.. மத்தவங்க கஷ்டப்பட்டா உங்களால தாங்க முடியலை இல்ல? அப்ப நீங்களும் கடவுள்.
#ஏன்னா.. நானும் கடவுள் :-))))) |
|
|
|
|
| வசுலீஸ்ட் ராஜாராமன் கடவுள் இருக்குன்னு சொல்றவனை நம்பலாம். இல்லன்னு சொல்றவனையும் கூட நம்பலாம். ஆனா உன்ன மாதிரி நான் தான் கடவுள்னு சொல்றான் பார்.. அவனை மட்டும் நம்பவே கூடாது. |
|
|
|
|
மேஜர் ராஜமன்னார் அதுவும் இதுவும் எதுவும் செய்யும் இனிய குணமும் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே!! |
|
|
|
|
| விஞ்ஞானி கோவிந்த் வாட்? கம் அகெயின்!? |
|
|
|
|
| பம்மல் சம்பந்தம் பழமொழி சொன்னா அனுபவிக்கனும். சும்மாங்காட்டியும் ஆராயக் கூடாது. |
|
|
|
|
| பல்ராம் நாயுடு புரியாத மாதிரி கமென்ட் போட்டா.. இந்த லாத்தி இல்ல லாத்தி அதை பின்னாடி விட்டு அப்படியே கொடை கொடைன்னு கொடைஞ்சா.. எல்லாம் அப்படியே வெளில வந்துடும். |
|
|
|
|
| காமேஷ்வரன் ஓ.. நீங்க பண்றது ரொம்ப அநியாயமாக்கும். பாட்டி இவர் சொல்றதை கேட்டேலோ? பீம் பாய்.. பீம் பாய்.. அந்த லாக்கரில் இருக்கிற ஆறு லட்சத்தை எடுத்து இந்த அவினாசி முகத்துல வீசி எறி. |
|
|
|
|
| இந்தியன் சேனாபதி லஞ்சம் வாங்குறதும் தப்பு.. கொடுக்கிறதும் தப்பு. |
|
|
|
|
| வேலு நாயக்கர் நாலு பேர் நல்லா இருப்பாங்கன்னா.. எதுவும் தப்பில்ல. |
|
|
|
|
| காமேஷ்வரன் ஓ நான் லஞ்சம்னு சொல்லலை. லட்சம்னு தான் சொன்னேனாக்கும். எல்லாம் இந்தப் பாட்டியால் தான் கேட்டியலோ!! |
|
|
|
|
உன்னை போல் ஒருவன் //எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் எண்டாலும் பயம். //
தெனாலி இந்தப் பயம் தான் உன்னை மாதிரியும் என்னை மாதிரியுமான காமன் மேனுக்கு மிச்சம். அதனால தான் தீவிரவாத சக்திகள் அப்பாவி பொது மக்களை பலி வாங்குறாங்க. |
|
|
|
|
ஆதி நாராயணன்
உன்னை போல் ஒருவன் – பயம்னா என்ன தெரியுமா? வீரம் இருக்கிற மாதிரி நடிக்க தெரியாதது. |
|
|
|
|
| உன்னை போல் ஒருவன் ஆதி பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறும் பொழுது.. என்னை மாதிரி காமன் மேனால் எப்படி வீரம் இருக்கிற மாதிரி நடிக்க முடியும்? |
|
|
|
|
| சக்தி வேல் பால் விலை ஏறுது.. பஸ் கட்டணம் ஏறுது.. பெட்ரோல் விலை ஏறுது.. முடியலை. என்னை விட்டுடுங்க ஐயா. நான் போறேன். |
|
|
|
|
பல்ராம் நாயுடு
சக்தி வேல் – அவுனா? இப்படிலாம் சோஷியல் நெட்வொர்க்லோ பேசினா பஞ்சாப் சிங்கு கொண்டை ஊசியாலேயே குத்துவாரு. பருவாலயா? |
|
|
|
|
| தெனாலி பெட்ரோல் என்றாலும் பயம்.. சிங் என்றாலும் பயம்.. கொண்டை ஊசி என்றாலும் பயம். |
|
|
|
|
| வேலு நாயக்கர் அவங்கள நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன். |
|
|
|
|
| உன்னை போல் ஒருவன் ஒரு காமன் மேன் நினைச்சா.. எதையும் நிறுத்த வைக்க முடியும். |
|
|
|
|
சிங்கார வேலன் //அவங்கள நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்.//
சொன்னபடி கேளு.. நீ மக்கர் பண்ணாத. |
|
|
|
|
| வசுலீஸ்ட் ராஜாராமன் @அஞ்சலி சார்: ஆகா.. உங்களுக்கு ஃபோபியா. ஒன்னியும் கவலைப்படாதீங்க. நான் டாக்டர் எம்.பி.பி.எஸ். இருக்கிற நோய்லாம் தட்டி பட்டிப் பார்த்து டிங்கரிங் பண்ணிடலாம். |
|
|
|
|
| தெனாலி நீங்க டொக்டரோ? எனக்கு முன்ன டொக்டர் மாத்ருபூதம் தான் கண்கண்ட தெய்வம். இனி நீங்களும் என்ட தெய்வம் தான். |
|
|
|
|
சேனாபதி இந்தியன் //நோய்லாம் தட்டி பட்டிப் பார்த்து டிங்கரிங் பண்ணிடலாம்//
உடம்புக்கு வந்திருக்கிற நோய் விட இப்ப சமுதாயத்திற்கு வந்திருக்கிற நோய் தான் அதிகம். இதை தட்டினால் எல்லாம் சரி வராது. தேவையில்லாத களை எல்லாம் எடுக்கனும். |
|
|
|
|
| விருவிரு மாண்டி மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன். |
|
|
|
|
ஆள வந்தான்
ஆஸ்காரை நம்பி படம் எடுத்த பொழுதே
படத்தின் திரைக்கதை சொதப்பிடுமே
மேக்கப்பை நம்பி வேஷம் போடும்பொழுதே
க்ளோஸ்-அப்பில் சாயம் வெளுத்திடுமே
நீ நம்பும் தொழில்நுட்பம் கூட
ஒருநாள் உன்னை கை விடுமே!!
என்றும் கலையை மட்டும் நம்பும் நம்பகம்
எல்லா படத்திற்கும் துணை வருமே!!
|
|
|
|
|
ஜார்ஜ் புஷ்
ஆள வந்தான் – விஸ்வரூபம் வில் வின் மெனி 5 ஆஸ்கார்ஸ். |
|
|
|
|
ஆள வந்தான்
ஆஸ்காருங்கிறது அமெரிக்கப் படங்களுக்கு தர்ற விருதுன்னு இந்த மொட்டை தலையனுக்குத் தெரிஞ்சது இந்த பு***** தெரியலையே!! |
|
|
|
|
விஜய் குமார்
ஸ்டாப் இட் நந்து. இங்க உனக்கென்ன வேலை? |
|
|
|
|
ஆள வந்தான்
பசப்பி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னை நிறுத்த சொல்றீயா? அன்னிக்கு தலை விழுந்திருந்தா நான் இதே கேள்வியை உன்னைப் பார்த்துக் கேட்டிருப்பேன். |
|
|
|
|
ரெட் ரோசஸ் திலீப் //பசப்பி//
எஸ். இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான். குத்துங்க எஜமான் குத்துங்க. |
|
|
|
|
ராகவன் DCP
திலீப் – ஹேய்.. வாட்ச் அவுட் யுவர் டங். இப்படித் தான் பேச சொல்லிக் கொடுத்தாளா உங்க அ…ம்மா. |
|
|
|
|
| சக்தி வேல் போதும். இந்த சண்டைலாம் இதோட போகட்டும். போய்.. எல்லாரும் புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்க. |
|
|
|
|
களத்தூர் கமல்
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்.
விஸ்வரூபம் |
|
|