இது தமிழ் ⚡ AMP

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’96 தயாரிப்பாளரின் எச்சரிக்கை

By Dinesh R | Nov 11, 2018

விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்குப் படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது. ‘96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதிய பாக்கி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நந்தகோபால், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதுவரை நான் எடுத்த அனைத்துத் திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ‘96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு எடுக்கவில்லையெனில் தான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் தான் தயாராக இருப்பதாத்க தெரிவித்தார் நந்தகோபால். திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அத்துடன் தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல், காலம் தாழ்த்தினால் தான் Office of the Director General competition commission of India, New Delhi என்கிற அமைப்பின் மூலம் தகுந்த மேற் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார் நந்தகோபால்.