இது தமிழ் ⚡ AMP

“ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை” – கமல்ஹாசன்

By Dinesh R | Mar 25, 2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது.

சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாகக் கருதுகிறேன்.

– கமல் ஹாசன்