இது தமிழ் ⚡ AMP

AOT விமர்சனம் | ஆகாயத்தில் ஒரு தாரகை review

By Dinesh R | Nov 21, 2026


Aakamsola Oka Tara

பூமியைத் தாண்டி ஆகாயத்தில் பறக்க வேண்டுமென ஆசைப்படுகிறாள் பலலங்கா எனும் குக்கிராமத்தில் வசிக்கும் கல்பனா எனும் பள்ளிச்சிறுமி. ஆனால், பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார் கல்பனாவின் அப்பா. ‘உனக்குப் பதினாறு வயசுதானா? அவ்ளோ சின்ன பொண்ணா நீ? உன்னோட கனவென்ன? படிச்சு என்னவாக நினைச்ச?’ என கல்பனாவின் கணவர் கிருஷ்ணா கேட்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Astronaut என்று கண்களில் கனவுகள் மின்ன தலையை உயர்த்திச் சொல்கிறாள் கல்பனா.

கல்பனாவின் கனவை நனவாக்குவதே தனது முதன்மை கடமை என கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகளும், அதன் பலனுமே படத்தின் கதை.

‘அதென்ன மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழாமல், நேற்று வந்த மனைவியின் கனவைத் துரத்தி வாழ்க்கையைக் கெடுத்துக்கிறீங்க?’ என தம்பியிடம் கோபப்படுகிறார் கிருஷ்ணாவின் அக்காவான சரஸ்வதி. கிருஷ்ணா, தனது அக்காவிற்கு ஒரு பதில் சொல்கிறார். அந்த பதிலால், சரஸ்வதியைப் போலவே படம் பார்க்கும் பார்வையாளர்களுமே எமோஷ்னல் ஆகிவிடுவர். இந்தப் படம், இது போன்ற உணர்வுப்பூர்வமான தருணங்களால் ஒரு மாயத்தைச் செய்துவிடுகிறது. சரஸ்வதியாக நடிப்பில் பின்னி எடுக்கும் ஸ்வாசிகா நடித்துள்ளார்.

குஜராத் சுரங்கத்தில் பிஜிலி எனும் இளம்பெண், அங்கே வேலை செய்யும் கிருஷ்ணாவைக் காதலிக்கிறார். கிருஷ்ணாவைக் கடைசி முறையாகச் சந்திக்கும் இடத்தில், “அவங்களை கல்பனாவை) நிலா நட்சத்திரங்களுக்குப் பக்கத்துல அனுப்பி வைங்க” என்று கூறி விடைபெறுகிறார். திரையில் கொஞ்ச நேரமே வந்து போனாலும், பிஜிலியாக நடித்துள்ள ருஹானி ஷர்மா தனது நடிப்பால் அழுத்தமான முத்திரையைப் பதிந்துள்ளார்.

கல்பனாவின் அம்மா கங்கம்மாவாக மானசி சுதிர் நடித்துள்ளார். மகளைப் பள்ளிக்கு அனுப்பியதற்காகக் கணவரின் கோபத்திற்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

ஸ்கை (SkyWay) எனும் நிறுவனத்தின் தலைவர் ரோஹினி கரியப்பாவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ஸ்கைவே (SkyWay) எனும் நிறுவனத்தின் தலைவர் ரோஹினி கரியப்பாவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நூறு பேரிடம் தனது கனவைச் சொன்னால், கிண்டலாகவும் ஏளனமாகவும் பார்ப்பவர்களை மீறி ஓரிருவராவது தனது லட்சியத்தை அடைய வழிகாட்டுவார்கள் என வீறுநடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாத்விகா வீரவள்ளி. கதாபாத்திரத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்திப் போகும் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான சாத்விகாவைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளரான கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த்.

மனதில் பதியுமாறு நிறைய பெண் கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும், கதையின் நாயகனாய், மனைவியின் கனவை அடைய உதவும் கிருஷ்ணா கதாபாத்திரம்தான் படம் முழுவதும் வியாபிக்கிறது. இப்படத்தைத் தவற விட்டுவிடக்கூடாது என்ற துல்கர் சல்மானின் முடிவு அவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்துள்ளது.

படிப்பின் மேன்மையை, கனவு காண்பதன் அவசியத்தை, லட்சியத்திற்காக நம்பிக்கையுடன் போராடும் விடாமுயற்சியை, நல்லதொரு ஃபீல்குட் படமாக அளித்து அசத்தியுள்ளார் இயக்குநர் பவன் சதினேனி.