இது தமிழ் ⚡ AMP

பத்தா விமர்சனம் | Baththa review

By Dinesh R | Oct 01, 2026

பத்தா எனும் பக்வத்சலம், ஊரில் எவருக்கும் பயப்படாமல், யாராக இருந்தாலும் அடி வெளுத்து வாங்கும் முரடராக உள்ளார்.எதிர்பாராதவிதமாக, கோடை விடுமுறையிலுள்ள ஒரு பள்ளியின் கழிவறைக்குள் பூட்டப்பட்டுவிடுகிறார். அப்படிச் சிக்கிக் கொள்ளும் அந்த எட்டு நாளில், அவர்க்கு எத்தகைய மனமாற்றம் ஏற்படுகின்றது என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், ‘ப்பாஆ’ என விஜய் சேதுபதியும், சீதாகாதி படத்தில் ‘ம்மாஆ’ என சுனில் ரெட்டியும், ஒரே ரியாக்‌ஷனைத் தொடர்ந்து செய்து கலகலப்பிற்கு உதவியிருப்பர். இது பாலாஜி தரணிதரனின் பிர்ந்த்தியேக பாணி. இப்படத்திலும், ‘தான் எப்படிக் கழிவறைக்குப் போனேன்’ எனும் கதையை ஏற்றயிறக்கத்துடன் க்யூட்டாகச் சொல்லி ரசிக்க வைக்கிறான் சிறுவன் சாய் பிரித்வி ராஜ். சபரி எனும் பாத்திரத்தில் அச்சிறுவன் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளான். கண் பார்வையிலேயே அவன் காட்டும் பயமும் பதற்றமும், குரலாலும் நடிக்கும் அவனது திறமை படத்திற்கு மிகப் பெரிய பலம். தன்னிடம் இரண்டு பொறை வாங்கத்தான் பணமிருந்தது எனச் சொல்லும்பொழுது பிரமாதப்படுத்தியுள்ளான் சாய் பிரித்வி ராஜ். பத்தாவின் மகள் தேன்மொழியாக சகஸ்ராவும் நன்றாக நடித்துள்ளார்.

பத்தாவின் மனைவி கண்ணிமாவாக லிஜோமோல் ஜோஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பத்தாவின் அடிதடி இயல்பைக் கண்டு வருந்தும்போதும், பத்தாவின் மனமாற்ற்ந்த்தைக் கண்டு நெகிழும்போதும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். பத்தாவாக விஜய் சேதுபதி வசன உச்சரிப்பால் ரசிக்க வைக்கிறார். கழிவறையில் சிக்கியுள்ள பொழுது, ‘பத்தாடா’ எனத் தொடங்கி, ‘மனைவியையும் மகளையும் ஒரு தடவையாவது பார்க்கணும்’ என இறைஞ்சும் அந்தக் கதாபாத்திர உருமாற்றத்தை மிக அழகாகக் கொண்டு வந்துள்ளனர் விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும்.

ஒரு மனிதன் தான் வாழும் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து திருத்தி அமைத்துக் கொள்ளும் மிக உயரிய கருவை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் பாலாஜி தரணிதரன். படம் பேசும் கருவும், அது தரும் தாக்கமும், பத்தாவை மிக முக்கியமான சினிமாவாக்கியுள்ளது.