இது தமிழ் ⚡ AMP

பிளாக் கோல்ட் விமர்சனம் | Black Gold review

By Dinesh R | Nov 12, 2026

மிக லாபகரமான தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. தலைமுடியையே கருப்புத் தங்கம் எனத் தலைப்புச் சுட்டுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சரக்குடன் செல்லும் வேனும், அதன் ஓட்டுநர் லிவிங்ஸ்டனும் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். லிவிங்ஸ்டனுக்கு என்னானது எனத் தேடுகிறார் அவரது மகனான வெற்றி. அவர்களது வாழ்க்கையில் கருப்புத் தங்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதே படத்தின் கதை.

நைனாராஜாவாக அருள் D. சங்கர் நடித்துள்ளார். சுருள் வாள் வீசிக் கம்பீரமாகத் தனது கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமா இன்னும் நன்றாக அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கம் எக்ஸ்போர்ட்ஸின் முதலாளியாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளார். அவரிடம் விசுவாசமாக வேலை செய்யும் லிவிங்ஸ்டன், ஒரு பாசமிகு தந்தையாக வலம் வருகிறார். லிவிங்ஸ்டனின் மனைவியாகத் துளசி நடித்துள்ளார். “நீங்க தொலைச்சது கிடைச்சிடுச்சு; நாங்க தொலைச்சது..” என வெங்கடேஷைப் பார்த்துக் கேட்கும்போது கலங்க வைக்கிறார்.

வெற்றியைக் காதலிக்கும் நாயகியாக மட்டும் பிரியாலயா தேங்கி விடுகிறார். வேனையும் லிவிங்ஸ்டனையும் தேடும் காவக்துறை அதிகாரியாக அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ளார். ஆனால், நகைச்சுவை நடிகர் ‘சோ’ காலத்துப் போலீஸ் போல், கடைசியாகத்தான் வருகிறார். அதுவும் நாயகன் லோக்கேஷன் ஷேர் செய்து வரவைக்கிறார். நாயகன் வெற்றி உற்சாகமற்று திரையில் சோபையுடன்

எழுதி இயக்கியுள்ளார் தீரன் அருண்குமார். புதிய களத்தில் கதை பயணிப்பது போலிருந்தாலும், திரைக்கதையில் புதுமை இல்லாததால், யூகிக்க முடிந்த கதையாக நேர்க்கோட்டில் பயணிக்கிறது. அந்த வேனை யார் எப்படிக் கடத்தியிருப்பார்கள் என்ற சுவாரசியத்தைத் தக்க வைத்ததன் மூலம் பிளாக் கோல்ட் ஒளிர்கிறது. நால்வர் அணி குழுவின் வில்லத்தனம் படத்தை முன்னகர்த்த உதவியுள்ளது. இலகு பணத்திற்காக மற்றவரது உயிரைத் துச்சமென நினைப்பவர்கள் மத்தியில் வாழும் அவலநிலைக்குச் சமூகம் சென்று கொண்டுள்ளது என்பதைப் படம் அழுத்தமாகப் பதிந்துள்ள வகையில் ‘பிளாக் கோல்ட்’ முக்கியத்துவம் பெறுகிறது.