இது தமிழ் ⚡ AMP

கேக்கு வாக்கு – பாடல் | Don’t Trouble the Trouble | Cakeu Walku

By Dinesh R | Aug 12, 2026

ஃபஹத் ஃபாஸில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் (Don’t Trouble the Trouble)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் ஃபாஸில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு (Cakeu Walku)” வீடியோ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தையும் அவரது வித்தியாசமான பைத்தியக்காரத்தனத்தையும் ஒரு தனித்துவமான பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது.

கால பைரவா, ஃபஹத் பாசில் மற்றும் சாரா ஆகியோர் இடம் பெறும் சிறப்பு இசை வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். கால பைரவா மற்றும் வாசி இணைந்து இந்தப் பாடலுக்கான கவர்ச்சிகரமான வரிகளை எழுதியுள்ளனர். சூரியின் துணிச்சலான தன்மையையும், எந்தவொரு சவாலான பணியாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் எளிதானது என்பதையும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களே பாடலையும் மிகுந்த உற்சாகத்துடன் பாடியுள்ளனர்.

இப்படம் 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிகர்கள்:-

ஃபஹத் பாசில்
சாரா
சௌரப் சச்தேவா

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – ஷஷாங்க் எலெட்டி
பேனர்கள் – Arka Mediaworks & Showing Business
தயாரிப்பாளர்கள் – ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா
இசை – கால பைரவா