இது தமிழ் ⚡ AMP

ரெமோ லட்டு

By Dinesh R | Oct 12, 2016

“என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்.

“என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி.

யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். ஏதோ சுமாரா காமெடி பண்ணுவேன். அவ்ளோ தான், நான் அழுகுலாம் இல்லைன்னு நான் நம்பிட்டிருந்தேன். ஆனா, இந்தப் படம் பார்த்ததும் தான் நானும் அழகு தானோன்னு தோணுச்சு. அதுக்குக் காரணம் பி.சி.ஸ்ரீராம் சார்” என்றார் ரெமோ நர்ஸான நாயகன் சிவகார்த்திகேயன்.