இது தமிழ் ⚡ AMP

தீபிகா படுகோன் இன் #AA22xA6

By Dinesh R | Jun 07, 2025

சன் பிக்சர்ஸ், ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலைப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நூறு கோடி, இருநூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களைத் தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான்-வேர்ல்ட் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராகப் பயணிக்கத் தொடங்கி, ‘ ஜவான்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்தியேக முத்திரையைப் பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையைப் படைத்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்துத் தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இத்திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருப்பது, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். அத்துடன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.