இது தமிழ் ⚡ AMP

ரத்தத்த தா – டிமான்டி காலனி 3 படத்தின் முதற்பாடல்

By Dinesh R | Aug 03, 2026

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகியுள்ளது. இப்பாடல் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார்.

படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிறப் பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களைக் கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு ஏற்ற கலை வடிவமைப்பும் பாடலுக்கு வலுவூட்டும் நிலையில், சாம் சி.எஸ் அமைத்துள்ள இசை அந்த இருளின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஏற்கனவே “டிமான்டி காலனி 2” திரைப்படத்திற்குத் தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி.எஸ், தற்போது “டிமான்டி காலனி 3” படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சவுண்ட் டிசைன் மற்றும் இசைக் கோர்வை, படத்தின் உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாகப் பணியாற்றி வரும் சாம் சி.எஸ், தமிழில் தற்போது ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.