இது தமிழ் ⚡ AMP

இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை

By Dinesh R | Aug 04, 2018

நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கிச் சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்த கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தியிடம் ‘எச்சரிக்கை’யாகத் தனது படத்தை ஒப்படைத்துவிட்டது படக்குழு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ , விஜய் மில்டனின் ‘கோலிசோடா 2’ போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது “எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் ” படத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இயக்குநரான சர்ஜுன் யூ-டியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர்.

அத்துடன் மணிரத்னம் A.R.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும், மா, லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையைக் கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அவரிடம் படத்தைப் பற்றி கேட்ட போது, “இது க்ரைம் திரில்லர் படம். ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற டைட்டிலிலேயே இது த்ரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.

சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகத் தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்.

பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தைப் பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இம்மாதம் படம் வெளியாகிறது” என்றார் இயக்குநர் சர்ஜுன்.

>> படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ்
>> தயாரிப்பு நிர்வாகம் – சதீஷ் ரகு
>> தயாரிப்பு – C.P.கணேஷ், சுந்தர் அண்ணாமலை
>> எழுத்து & இயக்கம் – சர்ஜுன்
>> ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ்
>> இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்.
>> பாடல்கள் – கபிலன்
>> கலை – விஜய் ஆதி நாதன்
>> நடனம் – விஜய்சதீஷ், அனுஷா ஸ்வாமி
>> சண்டை – மிராக்கில் மைக்கேல்

பி.கு.: கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ-டியூப் புகழ் இளைஞர்களை வைத்து, “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்ற படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.