இது தமிழ் ⚡ AMP

அஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்

By Dinesh R | Oct 21, 2019

சத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய உணவு திட்டமான அக்ஷய பாத்திரத்தின் விளம்பரத் தூதுவர். மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ (MSG – Mono Sodium Glutamate) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்தினார்.

“MSG விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளனர் எனினும், இது குறித்து அதிகாரபூர்வமான கருத்துகள் இன்று வரை வெளிவரவில்லை. FDA அஜினோமோட்டோவைப் பொதுவாக அனுமதித்தாலும், அஜினோமோட்டோ உள்ள உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக உபயோகித்தால் அடிவயிற்றில் பிரச்சனைகள், தைரொய்ட் செயல்பாட்டில் பிரச்சனைகள் ஹார்மோன் சம நிலையற்ற நிலை, சாப்பாடு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் அஜினோமோட்டோ உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில், ஐந்து வயதுக்கு உட்பட குழந்தைகளில் 38.4 சதவிகிதத்தினரின் வளர்ச்சி குன்றியுள்ளது. மேலும், 12 – 23 மாத குழந்தைகளில், 62 சதவிகிதத்தினர் மட்டுமே நோயெதிர்ப்புச் சக்தியுடன் உள்ளனர். குழந்தைகளின் நலன் என்பது நாட்டின் வளர்ச்சியைக் கணக்கெடும் முக்கியமான சுட்டிக்காட்டிகளில் (indicator) ஒன்று” என்றார்.