தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்து கொண்ட ரசிகர்கள் ‘கருவாப்பையா கார்த்திகா’ என்று சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார்.
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ‘திரைப்படங்களில் தான் நடிப்பேன்’ என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவைப் படங்களில் நடிக்க வைக்க சில இயக்குநர்களும் பேசி வருகிறார்கள்.
நல்ல கதையம்சமும், தனக்கேற்ற நல்ல கதாபாத்திரமுமாக இருந்தால் நடிக்கத் தயாராக உள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகா.