இது தமிழ் ⚡ AMP

Feel the Spark – இசையமைப்பாளர் ராலே ராஜனின் வைரல் பாடல்

By Dinesh R | Mar 17, 2026

சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ராலே ராஜன், “உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்துள்ளேன். என் இசையும் வரிகளும் இவ்வளவு விரைவாக மக்களிடம் சேர்ந்தது ஒரு கனவு நனவானது போன்ற உணர்வைத் தருகிறது. இது இன்னும் தொடக்கம் தான்” எனத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ராலே ராஜன், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, தமிழின் சங்கப்பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்தவர். சந்தம் என்ற அந்த ஆல்பம் சர்வதேச டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த முதல் தமிழ்ப் படம், இந்த வருடம் வெளியாகவுள்ளது.