இது தமிழ் ⚡ AMP

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

By Dinesh R | Aug 08, 2019

நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படத்தில் வித்தியாசமன பாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்த ஜி.வி.பிரகஷ்க்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசை ஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது.

ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. உலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும், பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டுப் பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது.

ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர்.ரகுமானுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுகமாகித் தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கிய ஜி.வி பிரகாஷ்க்கு, தற்போது நடிகராகவும் ஓர் அழுத்தமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.