இது தமிழ் ⚡ AMP

ஹனு-மான் தேஜா சஜ்ஜா

By Dinesh R | Nov 08, 2022

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹனு-மேன்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண செளரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்புக்காக நாயகன் தேஜா சஜ்ஜா தோன்றும் பிரத்தியேக புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் நாயகன் தேஜா சஜ்ஜா, ஒரு மலை மீது நின்று கொண்டு சங்கு மூலம் சத்தம் எழுப்புவது போல் தோற்றமளிக்கிறார். அவர் வித்தியாசமான பல வண்ணங்கள் கொண்ட சட்டையையும், பாரம்பரிய முறையிலான வேட்டியையும் அணிந்திருக்கிறார். தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மேன்’ திரைப்படம், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.