இது தமிழ் ⚡ AMP

சக்ரவியூகம் – நாயகன் அஜயின் மர்டர் மிஸ்ட்ரி

By Dinesh R | Jul 16, 2023

துப்பறியும் வகை “சக்ரவியூகம்” திரைப்படத்தை சேத்குரி மதுசூதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சஞ்சய் ராவின் மனைவி சிரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். விசாரணை அதிகாரி எஸ்.ஐ.சத்யா தனது விசாரணையைத் துவங்குகிறார். அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார். மேலும், சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத்தைச் சந்தேகிக்கிறார். கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் காணாமல் போனதால், சத்யா சிரியின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது சந்தேகம் கொள்கிறார். சிரியை உண்மையில் கொன்றது யார், சிரியைக் கொலை செய்யக் கொலையாளியைத் தூண்டியது எது என்பதைத் துப்புதுலக்குவதிலிருந்து துவங்கும் படம் பரபரப்பாகிறது. அடுத்தடுத்து எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள், அதிரடி சண்டைக் காட்சிகளோடு படம் வேகமெடுக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடிவு வரை வேகமான திரைக்கதையால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குநர். படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் அதன் தன்மைக்கேற்ப பலம் கொடுக்கிறது. க்ரைம் த்ரில்லராக மட்டுமில்லாது, ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் விதமான படமாகவும் உருவாகியுள்ளது. எஸ்.ஐ. சத்யாவாக அஜய், சஞ்சய் ராவாக விவேக் திரிவேதி, சிரியாக ஊர்வசி ஆகியோர் அந்தந்தப் பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார். அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.

நடிகர்கள்:

அஜய்
ஞானேஸ்வரி
விவேக் திரிவேதி
ஊர்வசி பரதேசி
பிரக்யா நயன்
ஷுபலேகா சுதாகர்
ராஜீவ் கனகலா
சுரேஷ் பிரியா
ஸ்ரீகாந்த் ஐயங்கார்
ராஜ் திரன்தாசு

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> இயக்குநர் – சேத்குரி மதுசூதன்
>> தயாரிப்பு – சஹஸ்ரா கிரியேஷன்ஸ்
>> இசை – பாரத் மஞ்சிராஜு
>> ஒளிப்பதிவு – ஜி.வி.அஜய் குமார்
>> படத்தொகுப்பு – ஜெஸ்வின் பிரபு