இது தமிழ் ⚡ AMP

ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்

By Dinesh R | Jun 11, 2018

‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J.கோபிநாத் இயக்குகிறார்.

ஜீவி படத்தைப் பற்றி இயக்குநர் V.J.கோபிநாத், “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது” என்றார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

>> ஒளிப்பதிவு – பிரவீன்குமார்
>> இசை – சுந்தரமூர்த்தி K.S
>> படத்தொகுப்பு – பிரவீன் K.L
>> கலை – வைரபாலன்

வெற்றிவேல் சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில், 8 தோட்டாக்களுக்குப் பிறகு ஜீவி படத்தை இரண்டாம் படமாகத் தயாரிக்கப்படுகிறது. பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் IB கார்த்திகேயன் இப்படத்தை லைன் ப்ரொட்யூஸ் செய்கிறார்.