இது தமிழ் ⚡ AMP

காத்து வாக்குல ரெண்டு காதல் – ரொமான்டிக் காமெடிப் படம்

By Dinesh R | Apr 22, 2022

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காமெடி ஜானரான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தென்னிந்தியத் திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான ‘டூ டூடூ டூ டூடூ’ பாடல், ‘ரெண்டு காதல்’, ‘நான் பிழை’ போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதைக் கவர்ந்த பாடலாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர் இணையமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழ் சினிமாவில் காதல் காமெடிப் படங்கள் இல்லையெனும் ஏக்கத்தைப் போக்கும் படி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டன்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் திரு. உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.