இது தமிழ் ⚡ AMP

கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

By Dinesh R | Aug 12, 2019

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் படம் ‘கடமான் பாறை’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

“நகைச்சுவை கலைந்த த்ரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை” என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான். படம் இம்மாதம் 23 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

>> தயாரிப்பு – மன்சூர் அலிகான்
>> தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
>> ஒருங்கிணைப்பு – ஜே.ஜெயகுமார்
>> கதை திரைக்கதை இயக்கம் – மன்சூரலிகான்
>> ஒளிப்பதிவு – T.மகேஷ்.
>> இசை – ரவிவர்மா
>> பாடல் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன் , மன்சூரலிகான்
>> வசனம் – R.துரை
>> கலை – ஜெயகுமார்
>> நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு
>> சண்டை – ராக்கி ராஜேஷ்
>> மக்கள் தொடர்பு – மெளனம் ரவி